பதிவு செய்த நாள்
05
ஆக
2019
11:08
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில், ஆடிப்பூர தேரோட்டம் நடந்தது.பிரசித்தி பெற்ற, 108 வைணவ தலங்களில் ஒன்றான, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில், ஆடிப்பூர விழா, ஜூலை, 27ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழா நாட்களில், ஆண்டாள், ரெங்கமன்னார் வீதியுலா நடந்தது. ஏழாம் நாளன்று, ஆண்டாள் மடியில், சயன கோலத்தில், ரெங்கமன்னார் காட்சி தரும் நிகழ்ச்சி நடந்தது.நேற்று அதிகாலை, ஏகாந்த திருமஞ்சனம் முடிந்து, 5:00 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் திருத்தேருக்கு எழுந்தருளினர். காலை, 8:05 மணிக்கு தேரோட்டம் துவங்கியது.கோவிந்தா, கோபாலா கோஷத்துடன், பக்தர்கள் வடம் பிடித்தனர். நான்கு ரத வீதிகள் சுற்றி, காலை, 10:29 மணிக்கு, தேர் நிலைக்கு வந்தது. பின், தேரில் ஏறி, பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆந்திரா, கர்நாடகா, உட்பட வெளி மாநிலங்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.