பதிவு செய்த நாள்
05
ஆக
2019
03:08
கரூர்: கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் சுவாமி திருக்கல்யாண வைபவம் நடந்தது. கரூர் ஸ்ரீ மஹா அபிஷேக குழு சார்பில், 21ம் ஆண்டு சுவாமி திருக்கல்யாண விழா கடந்த, 27ல் முகூர்த்த கால் நடுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் (ஆக., 3ல்)மாலை விக்னேஷ்வர பூஜை செய்தபின், இரவு, 7:00 மணிக்கு, பக்தர்கள் சீர்வரிசைகளை கோவிலுக்கு கொண்டு சென்றனர்.
இரவு, இசை, நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று (ஆக., 4ல்) காலை, 7:30 மணிக்கு, மங்கள இசையுடன் விழா துவங்கியது. காலை, 11:00 மணிக்கு. சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. மஹா தீபாராதனைக்கு பின், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம், 12:15 மணிக்கு, தமிழிசை பாடல்கள், வாய்ப்பாட்டு கச்சேரி நடந்தது.