விருதுநகர்:விருதுநகர் ரயில்வே பீடர் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ முரளிதர சுவாமி ஜியின் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பிரார்த்தனை மையத்தில் ஆடிபெருக்கை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.
108 சுமங்கலிப் பெண்கள் பங்கேற்று குங்குமத்தால் மஹா லெட்சுமி அர்ச்சனை செய்தனர். தொடர்ந்து உலக அமைதி வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது. அனைத்து பெண்களுக்கும் மங்கள பொருட்கள் வழங்கப்பட்டன. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பொறுப்பாளர் வெங்கடேஷ்குமார் செய்திருந்தார்.