திருச்சி அருகே மன்னார்புரத்தில் உள்ளது மகாலட்சுமி கோயில். இந்த கோயிலின் தளவாட அறைக்கு அருகே ஒரு கருநாகம் உள்ளது. அதுவே இந்த கோயிலின் பாதுகாவலன். சில நேரங்களில் தாயார் சன்னதி முன் நின்று படமெடுத்து ஆடி, அன்னையை இந்த கருநாகம் வணங்கும் காட்சியை பக்தர்கள் பார்த்து பரவசப் பட்டுள்ளனர். பொதுவாக இந்த நாகம் எப்போதாவதுதான் தென்படுமாம்.