பதிவு செய்த நாள்
07
ஆக
2019
03:08
ஈரோடு: ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், அறுபத்து மூவர் விழா, கொடியேற் றத்துடன் இன்று தொடங்குகிறது. காலை, 7:00 மணிக்கு, கோவில் வளாக கொடிமரத்தில் சிவாச் சாரியார்கள் கொடியேற்றுகின்றனர்.
இதை தொடர்ந்து சேரமான் பெருமாள் குருபூஜை மற்றும் சிறப்பு பூஜை, ஏழாம் திருமுறை முற் றோதுதல், மாலையில் தூத்துக்குடி சிவபிரகாச தேசிகர் அருளுரை மற்றும் திலகவதி சண்முக சுந்தரம் சொற்பொழிவு நடக்கிறது. நாளை (ஆக., 6ல்), சுந்தரதேவாரம் முற்றோதுதல், குமர குருபர சுவாமிகள் அருளுரை நடக்கிறது. 9ல், மாலையில் திருவிளக்கு வழிபாடு, மயிலை பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலாய சுவாமிகள் அருளுரை. 10ல், மாலை மருதாச்சல அடிக ளார் அருளுரை மற்றும் சொற்பொழிவு நடக்கிறது. 11ல் குன்னக்குடி பொன்னம்பல அடிகளார் அருளுரை, தேவார பன்னிசை, 12ல் திருவீதி உலாவுடன் விழா நிறைவடைகிறது.