பதிவு செய்த நாள்
07
ஆக
2019
03:08
மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி யூனியன், 46 புதூர் பஞ்., நொச்சிக்காட்டுவலசில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, வெள்ளப்பாறை முனியப்பசுவாமி கோவிலில், பொங்கல் விழா இன்று நடக்கிறது.
இதையொட்டி நேற்று (ஆக., 6ல்) மாலை, கோவில் சிவாச்சாரியார்கள், காவிரியில் தீர்த்தம் எடுத்து வந்தனர். இன்று (ஆக., 7ல்) காலை, 6:00 மணிக்கு பொங்கல் வைபவம், மாலை, 6:00 மணி க்கு பெரும்பூஜை நடக்கிறது. நாளை (ஆக., 6ல்) இரவு மறுபூஜையுடன், பொங்கல் விழா நிறைவு பெறுகிறது. விழாவையொட்டி, ஈரோடு தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்