பதிவு செய்த நாள்
08
ஆக
2019
12:08
பாகூர்:கன்னியக்கோவில் மன்னாதீஸ்வரர் உடனுறை பச்சை வாழியம்மன் கோவில் தீமிதி திருவிழா நாளை (9ம் தேதி) நடக்கிறது.
கன்னியக்கோவில் மன்னாதீஸ்வரர் உடனுறை பச்சைவாழியம்மன் கோவிலில் தீமிதி திரு விழா நாளை (9ம் தேதி) நடக்கிறது. அன்று மதியம் 12.00 மணிக்கு சுப்ரமணியர் வள்ளி, தெய் வானை திருக்கல்யாண உற்சவம், தொடர்ந்து, மாலை 5.00 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடக்கிறது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர்.
அதனையொட்டி, பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கோவில் வளாகத்தில் நேற்று (ஆக., 7ல்) மாலை எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
இன்ஸ்பெக்டர்கள் கவுதம் சிவகணேஷ், தனசேகரன், சப் இன்ஸ்பெக்டர் தன்வந்திரி, பாகூர் தீயணைப்பு நிலைய அதிகாரி பக்கிரி, அறங்காவலர் குழு நிர்வாகிகள் தனசேகரன், கலிய பெருமாள், ஜீவகணேஷ், செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், கண்காணிப்பு கேமரா பொருத்துவது, மருத்துவ முதலுதவி மையம், போலீஸ் பூத், குடிநீர், கழிவறை, வாகன நிறுத்தம், போக்குவரத்து மாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.