பெ .நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில், சுவாதி திருநாள் விழாவையொட்டி, உலக நலன் வே ண்டி சுதர்சன ஹோமம் நடந்தது.
நரசிம்மநாயக்கன் பாளையம், புதுப்பாளையம் ரோட்டில் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் சுவாதி நட்சத்திரத்தையொட்டி, சுதர்சன ஹோமம் நடந்தது. சுதர்சன ஹோமம் உலக நலனுக்காகவும், எதிரிகளை வீழ்த்துவதற்காகவும், சகல ஐஸ்வர்யமும் கிடைப்பதற்காக வும் சுவாதி நட்சத்திரத்தில் நடத்தப்படுகிறது. நேற்று இந்த வைபவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நிறைவில், அன்னதானம் நடந்தது. இதில் பங்கேற்றவர்களுக்கு சுதர்சன சக்கரம் ஹோமத்தில் வைத்து பூஜிக்க நாணயங்கள் வழங்கப்பட்டன.