வெள்ளகோவில்: வெள்ளகோவில் மாகாளியம்மன் கோவிலில் வரலட்சுமி நோன்பு மற்றும் ஆடி நான்காவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு சிறப்பு அலங்கார அபிஷேகம் நடந்தது. வரலட்சுமி நோன்பை முன்னிட்டு மாகாளிம்மனுக்கு பால், தயிர், திருமஞ்சனம்,தேன்,பன்னீர் உட்பட 18 திரவியங்கள் அபிஷேகம் நடந்தது. அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில், மாகாளியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பெண்களுக்கு வளையல்கள், மஞ்சள் கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது. கோவில் வளாகத்தில் கேல்வரகு கூல் அணைவருக்கும் வழங்கப்பட்டது.