கிருஷ்ணராயபுரம்: கோடாங்கிப்பட்டி பகவதியம்மன், பாம்பலம்மன் கோவிலில், ஆடி மாதம் முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த கோடாங்கிப்பட்டியில், பகவதியம்மன், பாம்பலம்மன் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் முன்னிட்டு தினமும் சிறப்பு பூஜை, ஆடி வெள்ளிக்கிழமைகளில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று கோவில் வளாகத்தில், திருவிளக்கு பூஜை நடந்தது. இதில். 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கோவில் நிர்வாகம் சார்பில், பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.