பதிவு செய்த நாள்
12
ஆக
2019
11:08
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில்தரிசன கட்டணம் இரு மடங்கு உயர்த்தியதால், பக்தர்கள் அவதிப்பட்டனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசன கட்டணத்தை இரு மடங்கு உயர்த்தி இந்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சுவாமி, அம்மன் சிறப்பு தரிசனம் கட்டணம் ரூபாய் 100, 50ம் பழைய கட்டணம் அடைப்புக்குள் (ரூ.50, 10), அர்ச்சனை ரூபாய் 10 (ரூ.5), கங்கை அபிஷேகம் ரூபாய் 50 (ரூ.30), ருத்ரா, பஞ்சாமிர்த அபிஷேகம் தலா ரூபாய் 3 ஆயிரம் (ரூ. 1500), 1008 சங்கு, கலச அபிஷேகம் தலா ரூபாய் 10 ஆயிரம் (ரூ.3 ஆயிரம்), புதியதாக சுவாமி சன்னதி விரைவு தரிசனம் ரூ. 200, என இரு மடங்கு கட்டணத்தை உயர்த்தியதால் பக்தர்கள் பெரிதும் பாதித்தனர்.கட்டண உயர்வை கண்டித்து இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் பிரபாகரன், குருசர்மா, ராமமூர்த்தி மற்றும் கட்சியினர் நேற்று கோயில் பஷே்கார் அலுவலகம் முன்பு எதிர்ப்பு தெரிவித்தனர். கோயில் மேலாளர் முருகேசன், கோயில் போலீஸ் எஸ்.ஐ., கோவிந்தராஜூ அவர்களை சமரசம் செய்தனர்.இந்து மக்கள் கட்சியினர் கூறுகையில், புதிய கட்டணத்தை கண்டித்து மாநில முழுவதும் போராட்டம் நடத்த உள்ளோம், என்றனர்.