பதிவு செய்த நாள்
12
ஆக
2019
12:08
கும்மிடிப்பூண்டி:சிறுவாபுரி முருகன் கோவிலில், வள்ளி மணவாள பெருமானுக்கு, திருக்கல் யாண மகோற்சவம், நேற்று நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த, சின்னம்பேடு கிராமத்தில் அமைந்துள்ள சிறுவாபுரி, பாலசுப்ரமணிய சுவாமி கோவில், திருமணத் தடை நீக்கும் திருத்தலமாகும். சென்னையைச் சேர்ந்த அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழுவினரின், 10ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, சிறுவாபுரி கோவிலில், நேற்று (ஆக., 11ல்), வள்ளி மணவாள பெருமானுக்கு, திருக்கல்யாண மகோற்சவம் நடைபெற்றது.
காலை, 8:00 மணிக்கு, மூலவர் அபிஷேகமும், 9:00 மணிக்கு, வள்ளி மணவாள பெருமானுக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனையும், அதை தொடர்ந்து, திருக்கைலாய இசை முழங்க, திருக்கல் யாணம் நடைபெற்றது.திருமண வரன் வேண்டி, 450 இருபால் பக்தர்கள், திருக்கல்யாண வைபவத்தில் பங்கேற்று, முருக பெருமானை மனம் உருக வேண்டினர். இதை தொடர்ந்து, சுவாமி உள்புறப்பாடும், சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது.