திருவாடானை:தொண்டி உந்திபூத்தபெருமாள் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. உலக நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும் நடந்த இந்த பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர்.முன்னதாக பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டு தீபராதனைகள் நடந்தது. தொண்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.