பதிவு செய்த நாள்
12
ஆக
2019
01:08
தொழுவூர்:திருவள்ளூர் அடுத்த, தொழுவூர் கிராமத்தில் அமைந்துள்ளது 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஸ்ரீஓம் சக்தி எல்லையம்மன் எனும் மாரியம்மன் கோவில்.இந்த கோவிலில், வரும் 18ம் தேதி, 219ம் ஆண்டு, தீமிதி திருவிழா நடைபெற உள்ளது.
முன்னதாக, 9ம் தேதி துவங்கிய திருவிழா, தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும். நேற்று 11ம் தேதி,, 2ம் நாளான உற்சவ விழாவில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன் ஆகியோர் பல வண்ண மலர் களால் அலங்கரிக்கப்பட்டு, வீதியுலா வந்தனர்.
இந்த உற்சவ விழாவில், தொழுவூர், செவ்வாப்பேட்டை, தண்ணீர்குளம், அரண்வாயல், திருவூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.