பதிவு செய்த நாள்
12
ஆக
2019
01:08
மாமல்லபுரம்:மாமல்லபுரம் சிற்ப பகுதிகளின் புல்வெளி, முறையான பராமரிப்பின்றி சீரழிகிறது.
மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு, குடைவரை மண்டபங்கள் உள்ளிட்ட கலைச்சின்னங்களை காண, சுற்றுலா பயணியர் வருகின்றனர். இந்த சிற்பங்களை, தொல்லியல் துறையினர் பராமரித்து, பாதுகாக்கின்றனர்.சிற்ப பகுதி, இயற்கை சூழல் ரம்மியம் கருதி, இத்துறையின் தோட்டக்கலை பிரிவு, பசுமை புல்வெளி அமைத்து, பராமரிக்கிறது.
பல ஆண்டுகளாக, துறை நிர்வாகம், உள்ளூர் தினக்கூலி ஊழியர்கள் மூலம், புல்வெளி அமைப் பது, களையெடுத்து சீரமைக்கிறது. தற்போது, பசுமை வெளி பராமரிப்பை, வடமாநில நிறுவன த்திடம், ஒப்பந்தத்தில் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.அந்நிறுவனம், தினக்கூலி ஊழியர் களுக்கு, முறையாக கூலி வழங்காதது உள்ளிட்ட பல குளறு படிகளால், புல்வெளி பராமரி க்கப்படாமல், சீரழிகிறது. இதனால், பூச்சிகள் பெருகி, பயணியர் அவதிக்குள்ளாகின்றனர்