புவனகிரி: புவனகிரி ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு 1,508 பேர் பங்கேற்ற கஞ்சிக்கலய ஊர்வலம் நடந்தது.புவனகிரி ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் 19ம் ஆண்டு ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் (ஆக., 10ல்) குருபூஜை, சக்தி கொடி ஏற்றம், கலச விளக்கு வேள்ளி பூஜையும் நடந்தது.நேற்று (ஆக., 11ல்) காலை 11.00 மணிக்கு கஞ்சிக்கலய ஊர்வலம் நடந்தது.
மாவட்டத் தலைவர் கிருபானந்தம் தலைமையில், இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.தொழில், வர்த்தகம், விவசாயம் செழிக்கவும், நாட்டில் அமைதி நிலவவும், 1,508 பேர் கஞ்சிக்கலயம் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக கோவில் வளாகத்தை சென்றடைந் தனர். மாலையில் நடந்த ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் மன்ற காப்பாளர் சுப்ரமணியன் வரவேற்றார். மாவட்ட செயலர் செல்வராஜ் முன்னிலையில், டாக்டர் அன்பழகன் தலைமை யில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.அண்ணாமலை பல்கலைழக பேராசிரியர்கள் பார்த்த சாரதி, பாலமுருகன் பங்கேற்று பேசினர்.சஞ்சீவிராயன் நன்றி கூறினார்.