பதிவு செய்த நாள்
13
ஆக
2019
12:08
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் மூலவர் மற்றும் பிரதோஷ நந்திக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சாயல்குடி கைலாசநாதர் சமேத மீனாட்சியம்மன் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
* மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவளநிற வள்ளியம்மன் கோயிலில் மாலையில் நடந்த பிரதோஷ விழாவில் மூலவருக்கும், நந்திக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டியினர் செய்திருந்தனர்.
* சிக்கல் அருகே மேலக்கிடாரம் திருவனந்தீஸ்வரமுடையார் சமேத சிவகாமியம்மன் கோயில் பழமை வாய்ந்ததாகும். நந்திக்கும், மூலவருக்கும் 18 வகையான அபிஷேகம் செய்யப்படது. பெண்கள் நெய்விளக்கேற்றி வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை மாதாந்திர பிரதோஷக்குழுவினர் செய்திருந்தனர்.
கடலாடி அருகே ஆப்பனுாரில் குரவங்கமழ் குழலாம்பிகை சமேத திருஆப்பநாதர் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. உற்ஸவமூர்த்தி புறப்பாட்டில் எட்டு திசைகளிலும் விஷேச தீபாராதனை நடந்தது.
* கீழக்கரை மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. மாலையில் உற்சவர் வீதியுலா புறப்பாடு நடந்தது. ஏற்பாடுகளை மாதாதந்திர பிரதோஷ கமிட்டியினர் செய்திருந்தனர்.
* ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் உள்ள வல்லபேஸ்வரர் சமேத வல்லபேஸ்வரி சன்னதியில் பிரதோஷ விழா நடந்தது. ஏற்பாடுகளை ஐயப்பா சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.