பதிவு செய்த நாள்
13
ஆக
2019
02:08
பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில், பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நேற்று (ஆக., 12ல்) நடந்தது.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பொள்ளாச்சி மற்றும் சுற்றுப் பகுதியில் கொண்டாடப்பட்டது. பக்ரீத் பண்டிகையையொட்டி பெரிய பள்ளி வாசலில், நேற்று (ஆக., 12ல்) காலை, 8:00 மணிக்கு சிறப்பு தொழுகை நடந்தது. பேஷ் இமாம் முகமது மன்சூர் ரஹ்மானி சிறப்பு தொழுகையை நடத்தி வைத்தார்.
பெரிய பள்ளி வாசல் தலைவர் தாதாகான் நன்றி கூறினார். இதில், திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகை செய்தனர்.இதுபோன்று, கோட்டூர் ரோடு, சூளேஸ்வரன்பட்டி, குமரன் நகர், பல்லடம் ரோடு உட்பட நகரப்பகுதியில் உள்ள, 21 பள்ளி வாசல்கள் மற்றும் கிராமப் புறங்களில், 27 என மொத்தம், 48 பள்ளி வாசல்களிலும் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு கூட்டுத்தொழுகை நேற்று நடந்தது.
வால்பாறை புதுமார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள பள்ளி வாசலில், பக்ரீத் பண்டிகையை யொட்டி நேற்று (ஆக., 12ல்) காலை, 10:00 மணிக்கு சிறப்பு தொழுகை நடந்தது.
விழாவில் கவுரவத்தலைவர் அமீது, மூத்தவல்லி கமாலுதீன், தலைவர் அப்துல்காதர், செயலா ளர் பசீர்அகம்மதுஉட்பட பலர் கலந்து கொண்டனர்.இதே போன்று, சோலையாறு, உருளிக்கல், சின்கோனா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழு கை நடந்தது. இஸ்லாமியர்கள் இனிப்புகள் வழங்கியும்; வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டும் பண்டிகையைகொண்டாடினர்.