பதிவு செய்த நாள்
13
ஆக
2019
02:08
வியாசர்பாடி:வியாசர்பாடி, பவானி பெரியபாளையத்தம்மன் கோவிலில், மஹா கும்பாபிஷே கம் நேற்று (ஆக., 12ல்) கோலாகலமாக நடந்தது.
வியாசர்பாடி, பெரியார் நகரில், பவானி பெரியபாளையத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவி லில், மூல கணபதி, சுப்ரமணியர், ராகவேந்திரர், துர்க்கையம்மன், ஆஞ்சநேயர் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். மூலஸ்தானத்தில், பவானி பெரியபாளையத்தம்மன் அருள் பாலிக் கிறார்.
கோவிலில், மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 9ம் தேதி, லட்சுமி அம்மன் கோவிலில் இருந்து, கலசம் புறப்பட்டு, கணபதி ஹோமம், கோ பூஜை, குதிரை பூஜை, சுமங்கலி பூஜை உள்ளிட்டவை நடந்தன. கடந்த, 10ம் தேதியன்று, மண்டப அலங்காரம், கும்ப அலங்காரம் செய்யப்பட்டு, மூலமந்திர ஹோமம், மங்கள இசை வாத்தியங்கள் வாசிக்கப்பட்டன.
தொடர்ந்து, நேற்று முன்தினம் (ஆக., 11ல்), துர்கா ஹோமம், லட்சுமி ஹோமம் ஆகியவை நடத்தப்பட்டன. நேற்று (ஆக., 12ல்) காலை, 9:30 மணிக்கு, கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
நிகழ்ச்சியில், அ.தி.மு.க., அவைத் தலைவர் மதுசூதனன், வட சென்னை வடகிழக்கு மாவட்ட செயலர், ஆர்.எஸ்.ராஜேஷ், கோவில் விழாக்குழு தலைவர், இளங்கோவன் ஆகியோர் பங்கே ற்று, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.விழாவில், 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசித்தனர்.