பதிவு செய்த நாள்
13
ஆக
2019
02:08
கோவை:கோவை, ராம்நகர், ஐயப்பன் பூஜா சங்கத்தில், ஆடி உற்சவம் என்ற, ஆன்மிக சொற் பொழிவு நிகழ்ச்சி நடந்து வருகிறது.’சுந்தரகாண்டம்’ என்ற தலைப்பில், தாமோதர தீக் ஷிதர் பேசியதாவது:அதர்மத்தை எதிர்த்து, தர்மத்தை நிலை நிறுத்த போராட வேண்டிய சூழல் ஏற்பட்டால், கண்டிப்பாக போராடியே ஆக வேண்டும்.
இதுபோன்ற சூழலில், சாதுவாகவே இருந்தால், அதர்மம் வென்று விடும்; அதற்கு இடம் கொடுக்கக் கூடாது.நம் எதிரில் இருப்பவர் கெட்டவர்களாக இருக்கும்போது, நாம் நல்லவர் களாக இருந்தால், எந்த பயனும் இல்லை. அவர்கள் பாணியில் சென்று, அவர்களை திருத்த வேண்டும். தெளிவான சிந்தனையுடனும், விவேகத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.
அவர்களை திருத்தப்போய் அவர்களின் வழியில் நாம் போய்விடக்கூடாது.நமக்கான பொறுப் பை உணர்ந்து, சிரத்தையுடன் செயல்பட வேண்டும். எடுத்த வேலையை அல்லது கொடுத்த வேலையை, சிறப்பாக செய்பவர்கள் என்றென்றும் நினைவில் நிற்பர்; உயர்ந்த இடத்தை அடைவர். இவ்வாறு, அவர் பேசினார்.