பதிவு செய்த நாள்
13
ஆக
2019
02:08
பல்லடம்: சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு, பல்லடம் பொங்காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. மாலை 3:30 மணி முதல் இளநீர், பால், தயிர், மஞ்சள், தேர்தல் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிவபெருமான் மற்றும் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, 4:30 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலி த்தார். அதேபோல், சித்தம்பலம் நவகிரக கோட்டை, மாதப்பூர் முத்துக்குமாரசாமி கோவில் உள்ளிட்ட பல கோவில்களிலும், சோமவாரம் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
வெள்ளகோவிலில் சோளீஸ்வரசுவாமி கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியெம் பெருமானுக்கு நேற்று (ஆக., 12ல்) சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பிரதோஷ வழிபாட் டை முன்னிட்டு பால், தயிர், தேன், பன்னீர், உட்பட 18 திரவியங்கள் அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து அலங்கார சிறப்பு பூஜை நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது.