உடுமலை:உடுமலை, நேரு வீதி காமாட்சி அம்மன் கோவிலில், வரும் 16ம் தேதி தம்பதி பூஜை நடக்கிறது.உடுமலை, நேரு வீதி காமாட்சி அம்மன் கோவிலில், ஆடி மாதத்தையொட்டி, சிறப்பு பூஜைகள் தொடர்ந்து நடக்கிறது.
ஆடி மாத இறுதி வெள்ளியையொட்டி, வரும் 16ம் தேதி, மாலை, 6:30 மணிக்கு தம்பதி பூஜை நடக் கிறது.பூஜையில், 108 தம்பதிகள் பங்கேற்கின்றனர். காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.