Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

காஞ்சிப்பெரியவர் இரண்டு விரல் காட்டும் பெருமாள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தவமிருக்கும் கோமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஆக
2019
16:45

சிவன், விஷ்ணு இணைந்து சங்கர நாராயணராக காட்சி தர வேண்டும் என கோமதியம்மன் தவமிருந்த தலம் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில். இங்கு ’ஆடித்தபசு’  விழா மிக சிறப்பாக நடக்கும். நாக அரசர்களான சங்கன் என்பவன் சிவனையும், பதுமன் என்பவன் மகாவிஷ்ணுவையும் வழிபட்டனர். இதில் யார் பெரியவர் என்ற விவாதம் எழுந்தது. தீர்ப்பு வேண்டி பார்வதியிடம் முறையிட்டனர். சிவன், விஷ்ணு இருவரும் சமமானவர்கள் என்பதை உணர்த்த பார்வதி விரும்பினாள். இதற்காக பூலோகம் வந்த அவளுடன் தேவலோக பெண்களும் பசுக்களாக உடன் வந்தனர். அக்னி வளர்த்து, அதன் நடுவே ஒற்றை விரலை ஊன்றி நின்று, தவத்தில் ஈடுபட்டாள். சிவன், விஷ்ணு இணைந்து சங்கர நாராயணராக இங்கு காட்சியளித்தனர். இருவரும் சமமானவர்கள் என்பதை உணர்ந்த நாக அரசர்கள், பாம்பு வடிவிலேயே சுவாமியை வழிபட்டனர். காலப்போக்கில் சிவலிங்கத்தை புற்று மூடியது. இரு பாம்புகளும் அதனுள் இருந்தன. ஒருமுறை பக்தர் ஒருவர் அறியாமல் புற்றை இடிக்க, உள்ளே இருந்த பாம்பின் வால் வெட்டுப்பட்டு ரத்தம் பீறிட, புற்றுக்குள் லிங்கம் இருப்பதையும் கண்டு அதிர்ந்தார். பாண்டிய மன்னர், இங்கு கோவிலை கட்டினார்.

சங்கரலிங்கம், கோமதியம்மன் சன்னதிகளுக்கு நடுவில் சங்கர நாராயணர் சன்னதி உள்ளது. இதில் சிவனின் வலப்பாகத்தில் தலையில் கங்கை, பிறை, அக்னி, ஜடாமுடி உள்ளன. காதில் குழை, கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் ஆடை உள்ளன. விஷ்ணுவுக்குரிய இடப்பாகத்தில் நவமணி கிரீடம், காதில் குண்டலம், மார்பில் துளசி மாலை, கையில் சங்கு, இடுப்பில் பட்டாடை உள்ளன. காலையில் துளசி தீர்த்தமும், மற்ற நேரத்தில் விபூதியும் தருகின்றனர். சிவனுக்குரிய வில்வம், பெருமாளுக்குரிய துளசி மாலைகளை அணிவிக்கின்றனர். சங்கர நாராயணருக்கு அபிஷேகம் கிடையாது.

அம்மன் சந்திரன் (மதி) போல அழகான முகமும், பசுக்களுடன் வந்து தவம் செய்ததாலும் ’கோமதி’ எனப் பெயர் பெற்றாள். ’கோ’ என்பதற்கு ’பசு’ என்பது பொருள்.  திங்கட்கிழமையில் பூப்பாவாடை, வெள்ளிக்கிழமையில் தங்கப்பாவாடை அணிவிக்கின்றனர். திருமண, புத்திரதோஷம் தீர மாவிளக்கு ஏற்றுகின்றனர். ஆடித்தபசு மண்டபத்தில் ஆக.13 அன்று காலையில் கோமதியம்மன் தவக் கோலமும், மாலையில் சங்கர நாராயணராக காட்சியளிக்கும் வைபவமும் நடக்கிறது. அம்மன் சன்னதியின் முன்புள்ள ஸ்ரீசக்கரத்தில் அமர்ந்தால் குழப்பம், கவலைகள் நீங்கும்.

* எப்படி செல்வது?
மதுரையில் இருந்து 120 கி.மீ.,

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ராம நாமத்தின் மகிமை! செப்டம்பர் 24,2019

தெய்வ நாமங்களை மந்திரமாக உருவேற்றுவது, ஓர் அரிய செயல். அதை விவரிக்கும் கதை இது...

வீராசாமி என்பவர், ... மேலும்
 
சோழர் காலத்தில், நவராத்திரி விழா, அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.
* தமிழகத்தில், நாயக்கர் ... மேலும்
 

கீதை காட்டும் பாதை செப்டம்பர் 23,2019

ஸ்லோகம்
அஹங்காரம் பலம் தர்பம்
காமம் க்ரோதம் ச ஸம்ஸ்ரிதா:!
மாமாத்ம பரதே ஹேஷு
ப்ரத் விஷந்தோப்ய ... மேலும்
 

பூமாலையே தோள் சேர வா! செப்டம்பர் 23,2019

விழுப்புரம் அருகிலுள்ள சிறுவந்தாடு கிராமத்தில், லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் கொண்டிருக்கிறார். ... மேலும்
 

அதிகாலை! சுபவேளை!! செப்டம்பர் 23,2019

திருப்பதியில் தினமும் அதிகாலையில் யமுனாத்துறையில் இருந்து பூமாலைகள் எடுத்து வரப்படும். இதனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.