தூத்துக்குடி :தூத்துக்குடி புதுக்கிராமம் ஸ்ரீ வேங்கடாசலபதி கோயிலில் வரும் 31ம் தேதி ஸ்ரீராமநவமி ஜனன மஹோத்ஸவம் துவங்குகிறது. தூத்துக்குடி புதுக்கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வேங்கடாசலபதி கோயிலில் வரும் 31ம் தேதியிலிருந்து அடுத்தமாதம் 8ம் தேதி வரை ஸ்ரீராமநவமி ஜனன மஹோத்ஸவம் நடக்கிறது. விழாவில் 31ம் தேதி காலை 6 மணிக்கு ஸ்ரீ கணபதி ஹோமம், காலை 9.30 மணிக்கு தீபாராதனை, ஸ்ரீராம ஜனன படனம் நடக்கிறது. தொடர்ந்து மாலை 7 மணிக்கு ஸ்ரீராம லட்சார்ச்னை நடக்கிறது. வரும் 1ம் தேதி காலை 9 மணிக்கு ஸ்ரீராம அகண்டதாரக நாமமும், மதியம் 1 மணிமுதல் மாலை 7 மணிவரையிலும், மறுநாள் 2ம் தேதி காலை முதல் மாலை 7 மணிவரையிலும் ஸ்ரீராம லட்சார்ச்சனை நடக்கிறது. விழாவில் வரும் 7ம் தேதி மாலை 6 மணிக்கு பஜனையும், திவ்யநாம சங்கீர்த்தனமும் நடக்கிறது. வரும் 8ம் தேதி காலை 7 மணிக்கு உஞ்சவர்த்திபஜனை, தொடர்ந்து 9 மணிக்கு ஸ்ரீசீதா கல்யாணமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.