அலங்காநல்லுார், அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயில் ஆடிதிருவிழா ஆக., 7ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆடி பிரமோற்ஸவ தேரோட்டம் நேற்று நடந்தது. அதிகாலை 5:15 மணிக்கு ஸ்ரீதேவி, பூமி தேவியருடன் சுவாமி எழுந்தருளினார். காலை 8:00 மணிக்கு கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷம் முழங்க பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர். காலை 10:38 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து, எம்.எல்.ஏ., பெரியபுள்ளான், வெள்ளியங்குன்றம் ஜமீன்தார் சண்முகராஜபாண்டியபுலிகேசி பங்கேற்றனர். இரவு பூப்பல்லக்கு நடந்தது.