திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பல்வேறு இடங்களில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணுால் அணியும் நிகழ்ச்சி நடந்தது.திண்டுக்கல்லில் ஆயிர வைசியர் மக்கள் நலச்சங்கம் சார்பில் நடந்த விழாவில் தலைவர் தேக்கமலை தலைமை வகித்தார். உபதலைவர் வெள்ளை ச்சாமி, செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு தரகுமண்டி குமாஸ்தாக்கள் திருமண மண்டபத்தில் உள்ள விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.இதை தொடர்ந்து 200 க்கும் மேற்பட்டோர் பூணுால் அணிந்து கொண்டனர். பொருளாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை துணை செயலாளர் மணிவேல் செய்தார்.நகர ஆயிர வைசியர் சங்கம் சார்பில் பூணுால் பண்டிகை, மாணவர்களுக்கு பரிசளிப்பு, சங்க துவக்க விழா என முப்பெரும் விழா நடந்தது. செயலாளர் மணி வரவேற்றார். தலைவர் முருகதாஸ் தலைமை வகித்தார். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2-வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தொழிலதிபர் கமலக்கண்ணன் பரிசு வழங்கினார். மாவட்ட ஆயிர வைசியர் சங்க செயலாளர் முத்து, மாநில ஆயிர வைசியர் ஐ.ஏ.எஸ்., அகாடமி கல்வி குழு நாகராஜன் மற்றும் பலர் பங்கேற்றனர். பொருளாளர் மூக்கை யா நன்றி கூறினார். இதே போல் திண்டுக்கல் சிருங்கேரி மடத்தில் பூணுால் அணியும் பண்டி கை நடந்தது. சிறப்பு பூஜைகள் நடந்தன.