ஆர்.எஸ்.மங்கலம் அருகே பெருமாள்மடையில் எருதுகட்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2019 02:08
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே பெருமாள்மடை கருப்பணசுவாமி கோவில் விழாவை முன்னிட்டு எருது கட்டு விழா நடந்தது. முன்னதாக சுவாமிக்கு கிராமத்தார் சார்பில் பொங்கல் வைத்தும், கிடா வெட்டியும் படையல் செய்து நேர்த்திக் கடன் நிறைவேற்றினர். அதைத் தொடர்ந்து கிராம பொட்டலில் களைகளின் கழுத்தில் வடம் கட்டப்பட்டு எருது கட்டு விழா நடைபெற்றது.போட்டியில் பங்கேற்ற காளைகளை உள்ளூர் காளைகள் (இளைஞர்கள்) பிடித்து வெற்றி கோப்பையை பெற்றனர். எருதுகட்டில் பெருமாள்மடை, பாரனூர், வெட்டுக் குளம், பெரியார் நகர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் இருந்த ஏராளமான காளைகள் கலந்து கொண்டன.