பெரியபட்டினம்:வண்ணாங்குண்டு மாரியம்மன் கோயில் முளைப்பாரி உற்ஸவ விழா நடந்தது. ஆக.,4ல் முத்து எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. தினமும் கோயில் திடல் முன்பு பெண்களின் கோலாட்டம், கும்மியாட்டமும், ஆண்களின் ஒயிலாட்டமும் நடந்தது. மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, சர்வ அலங்காரத்தில் காணப்பட்டார். நேற்று (ஆக., 15ல்) மாலை 4:00 மணிக்க முளைப்பாரியை சுமந்து சென்ற பெண்கள் வண்ணாங்குண்டு ஊரணியில் பாரியை கங்கை சேர்த்தனர். ஏற்பாடுகளை வண்ணாங்குண்டு கிராமத்தினர்செய்திருந்தனர்.