சபரிமலை,ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. நேற்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து தந்திரி கண்டரரு மகஷே் மோகனரரு பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கினார். பின்னர் மேல்சாந்தி 18ம் படி வழியாக சென்று ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்த்து கோயிலுக்கு திரும்பியதும் பக்தர்கள் 18ம் படி வழியாக வந்து தரிசனம்செய்தனர். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி கண்டரரு மகஷே் மோகனரரு அபிஷேகம் நடத்திய பின்னர் நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்து கணபதி ேஹாமம் நடத்துவார்.
இன்று(ஆக.,17) காலை புதிய மேல்சாந்தி தேர்வு நடைபெற்றது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி கண்டரரு மகஷே் மோகனரரு அபிஷேகம் நடத்திய பின்னர் நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்து கணபதி ஹோமம் நடத்தினார். காலை 7:30 மணிக்கு உஷபூஜைக்கு பின்னர் வரும் கார்த்திகை முதல் தேதி முதல் அடுத்த ஒரு ஆண்டு காலத்துக்கான புதிய மேல்சாந்தி தேர்வு நடைபெற்றது. இதில் சபரிமலை புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரியும், மாளிகைபுறம் மேல்சாந்தியாக பரமேஸ்வரன் நம்பூதிரியும் தேர்வு செய்யப்பட்டனர்.