சிவகங்கை மகாமாரியம்மன் கோயிலில் 508 திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2019 01:08
சிவகங்கை : சிவகங்கை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள மகாமாரியம்மன் கோயில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு 508 திருவிளக்கு பூஜை நடந்தது.
இங்கு ஆடியில் யாகசாலையுடன் பூஜைகள் துவங்கியது. ஒவ்வொரு வெள்ளியன்றும் அம்மனுக்கு வளைகாப்பு பூஜை, வரலட்சுமி நோன்பு பூஜை, சுமங்கலி பூஜை நடத்தப்பட்டன. கடைசி வெள்ளியான நேற்று காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதை தொடர்ந்து சுமங்கலி பூஜை நடந்தது. சுமங்கலி பெண்களுக்கு வளையல், மஞ்சள் கயிறு உள்ளிட்ட பிரசாத பொருட்கள் வழங்கப்பட்டன. மாலை 5:00 மணிக்கு 508 திருவிளக்கு பூஜை நடந்தது.
அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். பூஜைகளை கோவில் அர்ச்சகர் சந்திரசேகர சுவாமி செய்திருந்தார். ஏற்பாடுகளை ஆயுதப்படை டி.எஸ்.பி., தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.