பதிவு செய்த நாள்
17
ஆக
2019
02:08
விருத்தாசலம்: ஆடிமாத கடைசி வெள்ளியொட்டி, விருத்தாசலம் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
மாலை 4:00 மணிக்கு மேல் சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள் பாலித்தனர். மணவாள நல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், வெள்ளிக் கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது. வேடப்பர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.சந்தைதோப்பு அங்காள பரமேஸ்வரி கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. தென்கோட்டை வீதி மோகாம்பரி அம்மன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.