புவனகிரி : புவனகிரி சாமுண்டீஸ்வரி அம்மன்கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.புவனகிரி திருவருள் இறைப்பணி மன்றம் சார்பில், சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் பவுர்ணமி தோறும் சிறப்பு வழிபாடு மற்றும், ஆன்மிக சொற்பொழிவு நிகழ் ச்சி நடந்து வருகிறது.நேற்று 18ம் தேதி நடந்த நிகழ்ச்சிக்கு திருவருள் இறைப்பணி மன்ற தலை வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். காந்தி வரவேற்றார். மன்ற உறுப்பினர்கள் பழனிச்சாமி, கணேசன், செந்தில் முன்னிலை வகித்தனர். சிவத்தொண்டர் அன்பழகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ’மெய்ப்பொருள் நாயணார்’எனும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.