பதிவு செய்த நாள்
19
ஆக
2019
02:08
உடுமலை:பொன்னேரி அருகே, ஐயம்பாளையம்புதுார் ஆதி விநாயகர் கோவிலில், இன்று 19ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.உடுமலை, பொன்னேரி ஊராட்சி ஐயம்பாளையம்புதுாரில் ஆதிவிநாயகர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் கும்பாபிஷேக விழா, நேற்று 18ம் தேதி காலை, 5:00 மணிக்கு திருவிளக்கு வழிபாட்டுடன் துவங்கியது. பிள்ளையார் வழிபாடு, திருமகள் வழிபாட்டு பூஜைகள் நடந்தது. நேற்று 18ம் தேதி இரவு, 7:45 மணிக்கு, முதற்கால யாகமும், இரவு 8:00 மணிக்கு, விமான கலசம் நிறுவுதல், எண்வகை மருந்து சாற்றுதல் நிகழ்வுகள் நடந்தன. இரவு, 8:45 மணிக்கு வேள்வி நிறைவு, பேரொளி வழிபாடு மற்றும் திருமுறை விண்ணப்பித்தல் நிகழ்ச்சி நடந்தது.
விழாவில் இன்று 19ம் தேதி காலை, 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக வேள்வி நடக்கிறது. காலை, 8:30 மணிக்கு வேள்வி நிறைவு பெற்று, 9:00 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடும், காலை, 9:45 மணிக்கு கும்பாபிஷேக விழாவும் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை, 11:00 சிறப்பு பூஜை நடக்கிறது.