பதிவு செய்த நாள்
22
ஆக
2019
01:08
ஈரோடு: ஆவணி மாதம், கிருஷ்ண பட்சம் எனப்படும் தேய்பிறையில், அஷ்டமியுடன் வரும் ரோகிணி நட்சத்திரத்தில், கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அன்று கண்ணனுக்கு பிடித்த பால், வெண்ணெய், பழங்கள், உப்பு சீடை, இனிப்பு சீடை, தட்டை, அதிரசம் உள்ளிட்ட இனிப்பு வகைகளை வைத்து வழிபாடு செய்யப்படுகிறது.
குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு மகிழ்வர். வீடுகளில், வாயில் படியில் இருந்து, பூஜை அறை வரை மாவினால் குழந்தையின் காலடித்தடம் வரைந்து, வழிபடுவர். இந்தாண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா வரும், 23ல் நடக்கிறது. ஈரோடு கோட்டை, கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் அன்று காலை, 9:15 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.