பதிவு செய்த நாள்
22
ஆக
2019
01:08
ராமேஸ்வரம் : விநாயகர் சதுர்த்தி விழாவிற்காகராமேஸ்வரத்தில் 150 விநாயகர் சிலைகள் வடிவமைக்கும் பணியில், இந்து முன்னணியினர் ஈடுபட்டுள்ளனர்.
செப்.,2ல் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ராமநாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை, தேவி பட்டினம், திருப்புல்லாணி, மண்டபத்தில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பூஜை, அபிஷேகம் நடத்தி செப்.,4, 5ல் சிலைகளை இந்து முன்னணியினர் ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க உளளனர்.இதற்காக விழுப்புரத்தில் இருந்து 150 விநாயகர் சிலையின் பாகங்களை ராமேஸ்வரம் கொண்டு வந்தனர். இதனை இந்து முன்னணி ராமநாதபுரம் மாவட்ட பொது செயலர் ராமமூர்த்தி, நகர் செயலர் நம்புராஜன், மாவட்ட செயலர் ராஜசேகர் ஆகியோர் பார்வையிட்டனர்.
இதனையடுத்து விநாயகர் சிலைகள் வடிவமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ள தால், ஒரிருநாட்களில் சிலைகள் வடிவமைப்பு முழுமை பெறும். இதன் பிறகு சிலைகளை விழா குழுவிடம் ஒப்படைக்கப்படும்,என இந்து முன்னணியினர் தெரிவித்தனர்.