புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில், கிருத்திகையொட்டி, வள்ளிதேவ சேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு, சிறப்பு அபிேஷகம் நடந்தது.மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில் உள்ள 9 அடி உயர, ஜய மங்கள சர்வரோக குண விமோசன சத்ரு சம்ஹார வள்ளி தேவ சேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு, கிருத்திகை தினத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிேஷகம் மற்றும் சத்ரு சம்ஹார சுப்ரமண்ய அர்ச்சனை, மகா தீபாரதனை நடந்தது.ஏராாளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை ஆலய நிறுவனர் சிதம்பர குருக்கள், கீதாசங்கர குருக்கள் மற்றும் கீதாராம குருக்கள் செய்திருந்தனர்.