வடமதுரை : வடமதுரை ரெட்டியபட்டியில் கருப்பண்ண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த ஆக.23 மாலை தீர்த்தம், முளைப்பாரி அழைப்பு, கணபதி பூஜையுடன் துவங்கிய விழாவில் நேற்று காலை வரை நான்கு கால யாக பூஜைகள் நடந்தன. பின்னர் யாக சாலையில் இருந்து கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்றி கும்பாபிஷேகம் நடந்தது. கும்பகோணம் நித்யசத்வானந்தர் முன்னிலை வகித்தார். சுற்றுப்பகுதி மக்கள் பங்கேற்றனர்.