நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் 108 சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஆக 2019 03:08
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில், கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு, 108 சங்காபிஷேகம் நடந்தது.நெல்லிக்குப்பத்தில் பழமையான புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடா ஜலபதி சன்னதிகள் உள்ளன.
ஒரே இடத்தில் நின்று சிவனையும் பெருமாளையும் தரிசிக்க முடிவது இக்கோவில் சிறப் பாகும். கோவிலில் கும்பாபிஷேக 10ம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, நேற்று முன்தினம் 25ம் தேதி, பிரசன்ன வெங்கடாஜலபதிக்கு கலசாபிஷேகம் நடந்தது. நேற்று 26ம் தேதி காலை 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி சிறப்பு யாகம் நடந்தது.
பூலோகநாதருக்கு சங்காபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.மாலையில் ஒரே சமயத்தில் அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாஜலபதிக்கும் புவனாம்பிகை உடனு றை பூலோகநாதருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஒரே சமயத்தில் சிவனுக்கும், பெருமாளுக்கும் திருக்கல்யாணம் நடந்ததை காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.