புதுச்சேரி சுந்தரேசர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஆக 2019 03:08
புதுச்சேரி: கோரிமேடு, திருநகர் அங்கயற்கண்ணி உடனுறை சுந்தரேசர் கோவில் 14ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, இன்று (27 ம் தேதி) திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
அதனையொட்டி நேற்று மாலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கலச ஸ்தாபனம் நடந்தது. இன்று (27 ம் தேதி) காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜை துவங்கி 11:00 மணிய ளவில் மகா பூரணாஹீதி, மகா அபி ஷேகம், சுவாமிக்கு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. மாலை 5:30 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.