குளித்தலை: நச்சலூர் புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று 26ம் தேதி நடந்தது. முன்னதாக, கடந்த, 23ல், பெருகமணி காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் தீர்த்தக் குடம் எடுத்து வந்தனர். நேற்று முன்தினம் 25ம் தேதி இரவு, கோவில் முன் யாக சாலை ஏற்பாடு செய்து, மூன்று கால பூஜைகள் நடந்தது. நேற்று 26ம் தேதிகாலை, 10:00 மணியளவில், சிவாச் சாரியார்கள் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்தனர். விழாவில், சுற்று வட்டார பகுதியை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் பலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.