பதிவு செய்த நாள்
29
ஆக
2019
03:08
திருப்பூர், : வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா சர்ச் ஆண்டு விழா வரும் செப்., 10 வரை நடக்கிறது. ரயில் பயணிகள் வசதிக்காக, எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இன்று இரவு, 11:25 மணிக்கு எர்ணாகுளத்தில் புறப்படும் சிறப்பு ரயில் (06079) பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர் ரயில் நிலையங்களில் நின்று மறுநாள் மதியம், 12:25 க்கு வேளாங்கண்ணி செல்கிறது. செப்., 5ம் தேதியும் இந்த ரயில் இயங்குகிறது.நாளை 30ம் தேதி அதிகாலை, 3:25 க்கு கோவைக்கும், 4:25 க்கு திருப்பூருக்கும் ரயில் வருகிறது.
மறுமார்க்கமாக, ஆகஸ்ட், 30 மற்றும் செப்., 6 ம் தேதி மாலை, 5:10 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை, 8:30 மணிக்கு எர்ணாகுளம் வந்தடைகிறது.