பதிவு செய்த நாள்
30
ஆக
2019
11:08
உத்திரமேரூர்: ஆனம்பாக்கம் கங்கையம்மன் கோவிலில், கூழ்வார்த்தல் விழா, விமரிசையாக நடைபெற்றது.உத்திரமேரூர் ஒன்றியம், ஆனம்பாக்கத்தில் உள்ள கங்கையம்மன் கோவிலில், ஆண்டுதோறும் ஆடி, ஆவணி மாதங்களில், கூழ்வார்த்தல் விழா நடப்பது வழக்கம்.
அதன்படி, 42ம் ஆண்டு விழா, 25ம் தேதி, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று முன்தினம் (ஆக., 29ல்) காலை, குடம் ஊர்வலமும், மதியம், 2:00 மணிக்கு அம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.இரவு, 7:00 மணிக்கு, மலர் அலங்காரத்தில் வீதியுலா வந்த அம்மனை, பக்தர்கள் தரிசித்தனர்.