பணக்காரனாக வாழ்வதை விட ஏழையாக வாழ்வது சிறந்தது என்பது நாயகத்தின் கருத்து. ”ஏழையாக வாழச் செய்து, ஏழையாகவே மரணம் அடையச் செய்து, ஏழைகள் கூட்டத்தில் எழுப்புவாயாக” என இறைவனிடம் அவர் வேண்டுகிறார். அவர் இளம்வயதில் கூலிக்கு ஆடு மேய்த்தார். காட்டுக்குச் சென்று விறகுகளை வெட்டுவார். உறங்க பேரீச்சை மட்டை பாய், தலையணையை பயன்படுத்தினார். தன்னைப்போலவே மக்களும் எளிய வாழ்வை ஏற்றுக்கொள்ள அறிவுறுத்தினார்.