மேற்கு திசை நோக்கி நின்று குளிக்கக்கூடாது என்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03செப் 2019 06:09
குளிக்கும்போது எந்த் திசையை நோக்கி நின்று நாம் குளிக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும், அவர்கள் குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (கர்மம் செய்த பின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம். மேற்கு திசை நோக்கி நின்று குளிக்கக்கூடாது மீறி குளித்தால் அவர்களுக்கு உடல்ரீதியான நோய்கள் உண்டாகும் என்று சாத்திரம் சொல்கிறது.
முக்கியமான விரதம் வரும் நாளில்தான், ஒரு சிலருக்கு ஜலதோஷம் உள்ளிட்ட பிரச்சினைகள் வந்து பாடாய்படுத்தும். அதனால் அதுபோன்ற நல்ல நாட்களில் ஒரு சிலர் குளிக்க முடிய வில்லையே என்று மிகவும் கவலை கொள்வார்கள். இந்த மாதிரி நேரத்தில், குளித்ததற்கு ஈடாக ஏதேனும் ஒன்றை செய்ய முடியாதா என்று நினைப்பவர்கள் ஏராளம். சிவசிவ’, ‘ஓம் முருகா’, ‘ஓம் சக்தி’ ‘விநாயக நமஹ’, ‘ஓம் நமோ நாராயணாய’ என்று அவரவர் இஷ்ட தெய்வத்திற்குரிய மந்திரம் சொல்லி, தலை மற்றும் உடலில் நீரைத் தெளித்துக் கொள்ளலாம். இதை ப்ராம்ஹ ஸ்நானம்’ என்பார்கள். உடலை ஈரத் துணியால் துடைத்துக் கொள்ளலாம். இதை காபில ஸ்நானம்’ என்று சொல்வார்கள். உடல் முழுவதும் திருநீறு பூசிக் கொண்டாலும், குளித்ததற்கு சமமான பலன் கிடைக்கும். இதற்கு ஆக்நேய ஸ்நானம்’ என குறிப்பிடுவர்.