ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல், மண்டபம் கடலில் இந்து முன்னணி சார்பில் 34 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி விழாவில் இந்து முன்னணி சார்பில் ராமேஸ்வரத்தில் 19ம், மண்டபத்தில் 15 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பொதுமக்கள் பூஜை செய்து தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து விநாயகருக்கு மகா தீபாராதனை முடிந்ததும், ராமேஸ்வரம் தேவர் சிலையில் இருந்து விநாயகர் சிலைகளுடன் இந்து முன்னணியினர், பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.பின் இந்து முன்னணி மாவட்ட பொதுசெயலர் ராமமூர்த்தி, நகர் செயலர் நம்புராஜன், நிர்வாகிகள் பலர் இரவு 7:30 மணிக்கு கோயில் அக்னி தீர்த்த கடலில் விநாயகர் சிலைகளை கரைத்து, தரிசனம் செய்தனர்.மண்டபம் தென் கடலில் 15 சிலைகளை இந்து முன்னணி நிர்வாகிகள், பக்தர்கள் கரைத்தனர். விநாயகர் ஊர்வலத்தில் டி.எஸ்.பி., மகேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் திலகராணி, செந்தில்குமரன் மற்றும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.