பதிவு செய்த நாள்
04
செப்
2019
11:09
மேட்டுப்பாளையம்: இடுகம்பாளையம் அனுமந்தராயசுவாமி கோவில் மகாகும்பாபிஷேக விழா, நாளை (5ம் தேதி) நடைபெற உள்ளது.
சிறுமுகையை அடுத்த இடுகம்பாளையத்தில், அனுமந்தராயசுவாமி என்னும் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆன்மீக திருப்பணிகள் முடிந்து, மகா கும்பாபிஷேக விழா, நேற்று ஆசார்யவர்ணம், அங்குரார்பணம், வாஸ்து சாந்தியுடன் துவங்கியது. தொடர்ந்து யாகசாலை ஹோம பூஜைகளும், உபசாரங்கள் சாற்றுமுறையும் நடந்தது. இன்று காலை, திருப்பள்ளி எழுச்சியும், திருப்பாவை, திவ்யபிரபந்த சேவா, வேத பாராயணம் ஹோமம், ஸ்ரீமத் ராமாயணம் பாராயணம், உச்சவர் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. மாலையில், விமான கலசம்ஸ்தாபனம் உள்பட ஆன்மீக நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நாளை காலை, (5ம்தேதி) யாகசாலை ஹோமம் பூஜைகள் முடிந்த பின், தீர்த்தக்கும்பங்கள் ஊர்வலமாக எடுத்துச்சென்று, காலை, 9:15 லிருந்து,10:15 மணிக்குள் கோபுர கலசத்துக்கும், மூலவர் ஆஞ்சநேயருக்கும் புனித தீர்த்தங்களை ஊற்றி, மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.