திண்டுக்கல்:திண்டுக்கல்லில் இந்து தர்மசக்தி பாரத் சேனா சார்பில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் பஸ் ஸ்டாண்ட் அருகில் இருந்து தொடங்கியது.
எட்டு சிலைகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோட்டைக் குளத்தில் கரைக்கப்பட்டது. மாவட்ட பொது செயலாளர் மகேந்திரன் தலைமை வகித்தார். தலை வர் செல்வக்குமார் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் செந்தில்கண்ணன், இந்து தர்மசக்தி மாநில தலைவர் நித்யசர்வானந்தா மற்றும் பலர் பங்கேற்றனர்.