பதிவு செய்த நாள்
05
செப்
2019 
02:09
 
 சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில், பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி  சார்பில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம் எடுத்து  சென்று, ஆற்றில் கரைக் கும் நிகழ்ச்சி நேற்று 4ம் தேதி  நடந்தது.
சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  இந்து முன்னனி மற்றும் பொதுமக்கள் சார்பில், 80 சிலைகள் அலங்கரிக்கப்பட்டு  டிராக்டர், டெம்போ வேன், மினி ஆட்டோ போன்றவைகளில் நேற்று (செப்., 4ல்) மாலை, 4:30 மணிக்கு எஸ்.ஆர்.டி., கார்னருக்கு எடுத்து வரப்பட்டது. 5:00 மணியளவில் ரங்கசமுத்திரம், புதிய பஸ் நிலையம், ஆற்றுப்பாலம், காவல்நிலையம், தபால்ஆபீஸ் வீதி, அக்ரஹாரம், கோட்டுவீராம்பாளையம், பழையமார்க்கெட், மணிக்கூண்டு, சத்யா தியேட்டர் ரோடு, வடக்குப்பேட்டை, திப்புசுல்தான் ரோடு பகுதிக்கு ஊர்வலமாக எடுத்து சென்று பவானி ஆற்றில் கரைத்தனர். 
டி.ஐ.ஜி., கார்த்திகேயன் தலைமையில், மாவட்ட எஸ்.பி., சத்திகணேசன் மேற்பார்வையில், ஏ.டி.எஸ்.பி., சார்லஸ், டி.எஸ்.பி., சுப்பையா மற்றும் 400க்கும் மேற்பட்ட போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் சிலை கரைப்பு நிகழ்ச்சி நடந்தது.
* பெருந்துறை பேரூராட்சி, கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி மற்றும்  பெருந்துறை ஒன்றிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த, 19 விநாயகர் சிலைகளின்  ஊர்வலம் நடந்தது. பெருந்துறை பகுதியில் கோட்டை முனியப்பன்  கோயில்,கோட்டைமேடு, அண்ணாசிலை, பெருந்துறை பேரூராட்சி எதிரில்,  பெத்தாம்பாளையம், ஜெ.ஜெ., நகர், சென்னிவலசு, ஜீவாநகர், துடுப்பதி, லட்சுமிபுரம்,  வேட்டைக்காரன்புதூர், கராண்டிபாளையம், விஜயமங்கலம், கள்ளிய ம்புதூர் உட்பட,  19 இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. நேற்று 4ம் தேதி, மாலை, 5:00 மணிக்கு புதிய பஸ் ஸ்டாண்ட் கோட்டை முனியப்பன் கோவிலில் இருந்து ஊர்வலமாக கிளம்பிய வாகனங்கள், குன்னத்தூர் ரோடு, அக்ரஹார வீதி, அரசு மருத்துவமனை, காவல் நிலைய ரவுண்டானா, தாலுகா அலுவலக சாலை, அண்ணாசிலை வழியாக பவானி சாலையை அடைந்து, கூடுதுறை காவிரியாற்றில் கரைக்கப்பட்டது.
* விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஆப்பக்கூடல் மற்றும் பவானி பகுதிகளில்,  விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இதே போல் நாமக்கல், சேலம் மற்றும்  அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள், விநாயகர்  சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இதன் ஒரு பகுதியாக, நேற்று 4ம் தேதி மாலை பவானி கூடுதுறை பகுதியில் உள்ள விநாயகர் சிலைகளில் ஏராளமான பொதுமக்கள் விநாயகர் சிலைகளை கரைத்தனர். 
* கொடுமுடி யூனியன், சிவகிரி பேரூராட்சிக்குட்பட்ட இளங்கோதெரு  பாலவிநாயகர் கோவில், கொல்லங்கோவில் பேரூராட்சிக்குட்பட்ட வள்ளிபுரம்,  தாண்டாம்பாளையம், ஜெ.ஜெ.நகர் உள்ளிட்ட இடங்களில் இந்து முன்னணியினர்  விநாயகர் சதுர்த்தி விழாவை யொட்டி, ஏழு விநாயகர் சிலைகளை வைத்து  வணங்கி வந்தனர். இந்நிலையில், நேற்று 4ம் தேதி இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில், முதல் கட்டமாக ஏழு விநாயகர் சிலைகளையும், வாகனங்களில் ஏற்றி நேற்று 4ம் தேதி  மாலை ஊர்வலமாக எடுத்து சென்றனர். பின்னர், கொடுமுடி காவிரியாற்றில் ஏழு விநாயகர் சிலைகளையும் இந்து முன்னணியினர் கரைத்தனர்.