பதிவு செய்த நாள்
06
செப்
2019
03:09
காஞ்சிபுரம்:காஞ்சி அத்தி வரதர் வைபவத்தின்போது, அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டதாக வும், அதனால், தனக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என, கலெக்டரிடம் ஒருவர், மனு அளித்துள்ளார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஜூலை, 1 முதல், ஆக., 17ம் தேதி வரை, அத்தி வரதர் வைபவம், விமரிசையாக நடந்தது.பாதுகாப்புஇக்கோவிலுக்கு வந்த பக்தர்கள் பாது காப்பிற்காக, வரதர் கோவிலைச் சுற்றியுள்ள அனைத்து தெருக்களும், போலீசார் கட்டுப் பாட்டில் வந்தன.இதனால், வெளியே சென்று வீடு திரும்புவது உள்ளிட்டவற்றால், அத் தெருவாசிகள் பாதிக்கப்பட்டனர்.
வைபவத்தால் தான் பாதிக்கப்பட்டதாகவும், தனக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும், சின்ன காஞ்சிபுரம், சேதுராயர் தெருவைச் சேர்ந்த கோ.ரவி என்பவர், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர், பொன்னையா விடம், நேற்று, மனு கொடுத்துள்ளார்.
அதன் விபரம்:அத்தி வரதர் வைபவத்தின்போது, அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல், வீட்டில் முடங்கி கிடந்தேன்; வீட்டு சிறையில் அடைக்கப்பட்டது போல் இருந் தது. இது, மனித உரிமை மீறல்.இழப்புவைபவ நாட்களில், பொதுமக்களால் வெளியில் செல்ல முடியவில்லை; வேலைக்கு செல்ல முடியவில்லை.இந்த இழப்புக்கு, ஹிந்து அற நிலையத் துறையும், மாவட்ட நிர்வாகமும்தான் காரணம். எனவே, நஷ்ட ஈடாக எனக்கு, 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.