மந்தாரக்குப்பம்: பெரியாக்குறிச்சி தக் ஷிண விநாயகருக்கு, திருக்கல்யாணம் நடந்தது. மந்தாரக்குப்பம் அடுத்த பெரியாக்குறிச்சி தக் ஷிண விநாயகர் கோவிலில், கடந்த 2 ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா துவங்கியது.
தினசரி சிறப்பு பூஜை நடந்தது. விநாயகருக்கு திருக்கல்யாணம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.மணமகன் கோலத்தில் விநாயகர் காட்சி அளித்தார். மணமகள் கோலத்தில் இருந்த சிக்தி, புக்தி சுவாமிகளுக்கு, முறைப்படி சீர்வரிசை, பூ, பழங்கள், இனிப்புகள் வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர், மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து சுவாமிகளுக்கு தாலிகட்டும் நிகழ்ச்சி நடந்தது.பஜனை பாடல்கள் பாடி சுவாமிகளுக்கு ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. திருக்கல்யாணம் முடிந்தவுடன் பக்தர்களுக்கு விருந்து கொடுக்கப்பட்டது. பக்தர்கள் மொய்ப்பணம் வைத்தனர். ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாணத்தை கண்டுகளித்தனர்.